சமையல்

சப்பாத்தி, தோசைக்கு சூப்பரான டபுள் பீன்ஸ் கிரேவி

Published On 2023-02-09 09:17 GMT   |   Update On 2023-02-09 09:17 GMT
  • இதயநோய் உள்ளவர்கள் வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • டபுள் பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்:

டபுள் பீன்ஸ் - 150 கிராம்,

பெரிய வெங்காயம் - 1,

தக்காளி - 1,

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,

தேங்காய் - 5 சில்லு,

காய்ந்த மிளகாய் - 3,

வேர்க்கடலை - ஒரு ஸ்பூன்,

பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்,

சீரகம் - அரை ஸ்பூன்,

சோம்பு - ஒன்றரை ஸ்பூன்,

தனியா - அரை ஸ்பூன்,

கரம் மசாலா - அரை ஸ்பூன்,

மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - - ஒரு கொத்து,

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

டபுள் பீன்ஸ் பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

தேங்காயைத் துருவி கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரை ஸ்பூன் சோம்பு, துருவிய தேங்காய், தனியா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஊறவைத்த டபுள் பீன்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி, 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு முறை கலந்து விட்டால் போதும்.

சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி தயாராகிவிடும்.

Tags:    

Similar News