சமையல்

தேங்காய் ரெய்தா

Published On 2023-11-26 10:33 GMT   |   Update On 2023-11-26 10:33 GMT
  • இந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சர்க்கரை, உப்பு கலந்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் துண்டுகள் - ½ கப்

பச்சை மிளகாய் - 2

சர்க்கரை கால் டீஸ்பூன்

தயிர் -1 கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

தேங்காய் துண்டுகளுடன், நறுக்கிய பச்சை மிளகாய், சர்க்கரை, உப்பு கலந்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் அதில் தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். இந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் சீரகத்தை சேர்க்க வேண்டும். சீரகம் நன்றாக பொரிந்ததும். தேங்காய் கலவையில் இந்த தாளிப்பைக் கொட்டி அதன் மீது கொத்தமல்லித்தழையை தூவ வேண்டும். சுவையான 'தேங்காய் ரெய்தா' தயார்.

Tags:    

Similar News