சமையல்

காலிஃப்ளவர் சுக்கா செய்யலாம் வாங்க...

Published On 2022-11-10 08:19 GMT   |   Update On 2022-11-10 08:19 GMT
  • சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
  • பத்தே நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1

தக்காளி - 150 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

பட்டை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

பிரியாணி இலை - 1

சோம்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

காலிஃப்ளவரை நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் காலிஃப்ளவரை தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

மசாலா நன்றாக காலிஃப்ளவரில் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.

Tags:    

Similar News