சமையல்

வித்தியாசமான வெண்டைக்காய் ரெய்தா

Published On 2023-11-26 15:55 IST   |   Update On 2023-11-26 15:55:00 IST
  • பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வெண்டைக்காய்களைப் போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும்.

தேவையான பொருட்கள்:

பிஞ்சு வெண்டைக்காய்-  ௧௫ (நறுக்கியது)

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளரிக்காய் -கப்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

பிளாக் சால்ட் - கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

புளிப்பில்லாத தயிர்- ஒரு கப்

கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெண்டைக்காய்களை சுத்தப்படுத்தி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் வெண்டைக்காய்களைப் போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். அதன்பிறகு அதில் காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்போது எண்ணெய்யை வடித்து வெண்டைக்காய்களை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

அகலமான கிண்ணத்தில் தயிர், பொடிதாக நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், பிளாக் சால்ட் ஆகியவற்றை போட்டு கலக்க வேண்டும். இதனுடன் வெண்டைக்காய்களையும் சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இப்போது சுவையான 'வெண்டைக்காய் ரெய்தா தயார்.

Tags:    

Similar News