ஆரோக்கியம்
காளான் சாதம்

10 நிமிடத்தில் செய்யலாம் காளான் சாதம்

Update: 2021-10-27 09:17 GMT
காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
காளான் - 10,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 6 பல்,
வெங்காயத் தாள் - 2,
பச்சை கலர் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
சீன உப்பு - அரை டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கிகொள்ளவும்.

எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள்.

வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.

இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான காளான் சாதம் ரெடி.

Tags:    

Similar News