லைஃப்ஸ்டைல்
பச்சை பயறு பொரியல்

உடல் எடையை குறைக்கும் பச்சை பயறு பொரியல்

Published On 2021-10-15 05:33 GMT   |   Update On 2021-10-15 05:33 GMT
பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறை வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்

முளைகட்டிய பச்சை பயறு - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

தாளிக்க

கடுகு- கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் முளைகட்டிய பச்சை பயறை சேர்த்து வதக்கவும்.

1 நிமிடம் வதக்கிய பின்னர் பயறு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

பயறு மென்மையாக வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லிதழை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

சத்தான சுவையான முளைகட்டிய பச்சை பயறு பொரியல் ரெடி.
Tags:    

Similar News