பெண்கள் உலகம்
பட்டாணி சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல் பட்டாணி சுண்டல்

Published On 2021-10-07 10:52 IST   |   Update On 2021-10-07 10:52:00 IST
நவராத்திரி முதல் நாளான இன்று இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க சத்தான பட்டாணி சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருள்கள்:

பட்டாணி - 1 கப் ( Yellow peas  )
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 2
தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து

தாளிக்க:

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறி விட்டு, தேங்காய்ப் பூ, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான பட்டாணி சுண்டல் ரெடி.

Similar News