பெண்கள் உலகம்
வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி

வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி

Published On 2021-07-29 11:12 IST   |   Update On 2021-07-29 11:12:00 IST
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மாவு (மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்) - ஒரு கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
சோயா மாவு - கால் கப்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.

இதை சிறிய அளவு உருண்டையாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் (அ) நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி ரெடி.

Similar News