லைஃப்ஸ்டைல்
பரங்கிக்காய் பச்சடி

உடல் சூட்டை குறைக்கும் பரங்கிக்காய் பச்சடி

Published On 2021-07-28 05:19 GMT   |   Update On 2021-07-28 05:19 GMT
பரங்கிக்காய் குளிர்ச்சியானதாக இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
தேவையான பொருட்கள்

பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை,
புளி - எலுமிச்சை அளவு,
பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 துளி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.

செய்முறை

பரங்கிக்காயின் தோலையும் விதைகளையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.

கரைத்த புளியை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதித்தவுடன் ஆற வைத்து  மசிக்கவும்.

எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

சூப்பரான பரங்கிக்காய் பச்சடி ரெடி.
Tags:    

Similar News