லைஃப்ஸ்டைல்
பாலக் பன்னீர்

இரும்புசத்து நிறைந்த பாலக் பன்னீர்

Published On 2021-07-17 05:20 GMT   |   Update On 2021-07-17 05:20 GMT
தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் பன்னீர். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாலக் கீரை - 2 கட்டு
கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
நெய் - 5 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி - அரை கப்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
நறுக்கிய பன்னீர் - 1 கப்

செய்முறை:

கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதனை பாத்திரத்தில் போட்டு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

வெந்ததும், கீரை கலவையை நன்றாக கடைந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் சீரகம், கரம் மசாலா, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

பொன்னிறமானவுடன் தக்காளியை கொட்டி கிளறவும்.

நன்கு வதங்கியதும் கடைந்த கீரையை சேர்க்கவும். அதனுடன் பன்னீர் சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

ஆரோக்கிய பலன்: இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்புசத்து இருப்பதால் ஆஸ்துமா வராமல் தடுக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எலும்புகளுக்கும் பலம் சேர்க்கும்.

குறிப்பு: கீரையை சமைக்கும்போது மூடிவைக்க கூடாது. அப்போதுதான் அதன் நிறம் மாறாது.
Tags:    

Similar News