லைஃப்ஸ்டைல்
வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை

Published On 2021-06-21 05:14 GMT   |   Update On 2021-06-21 05:14 GMT
குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை ரவை - ஒரு கப் (வேர்க்கடலையை ரவை போல பொடித்துக் கொள்ளவும்),
கோதுமை ரவை - அரை கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

வேர்க்கடலை ரவை-கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை ரெடி.
Tags:    

Similar News