லைஃப்ஸ்டைல்
சூப்பான தித்திப்பான மாம்பழ சட்னி

சூப்பான தித்திப்பான மாம்பழ சட்னி

Published On 2021-06-05 05:31 GMT   |   Update On 2021-06-05 05:31 GMT
கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 2
கடுகு - தாளிக்க
வர மிளகாய்-2
வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
வெல்லம்- தேவையான அளவு
நல்லெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும். கடுகு தாளித்து, வரமிளகாயை அதில் சேர்க்கவும்.

பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள். 5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் வெல்லத்தை சேருங்கள்.

அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள். பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம்.

இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி.

இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Tags:    

Similar News