லைஃப்ஸ்டைல்
தர்ப்பூசணி அடை

தர்பூசணி சத்தான சுவையான அடை செய்யலாமா?

Published On 2021-05-31 05:28 GMT   |   Update On 2021-05-31 05:28 GMT
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியில் ஜூஸ், ஐஸ்கிரீம் மட்டுமல்ல பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணியில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 1
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

தர்பூசணி பழத்தின் தோலை மெலிதாக சீவிவிட்டு வெள்ளை நிறப்பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து துருவிக்கொள்ளவும்.

அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவு கலவையுடன் தர்பூசணி துருவல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் எண்ணெய் விட்டு தடவி, மாவை அடைகளாக தயார் செய்து வைக்கவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவைத்து ருசிக்கலாம்.
Tags:    

Similar News