லைஃப்ஸ்டைல்
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டை செய்யுங்க.... இது சத்தானது... சுவையானது...

Published On 2020-08-20 06:15 GMT   |   Update On 2020-08-20 06:15 GMT
விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டை செய்ய விரும்பினால் கோதுமை ரவை வைத்து சத்தான சுவையான கொழுக்கட்டை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் ? 2
தேங்காய் துருவல் - கால் கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை



செய்முறை :

வெறும் வாணிலியில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.

சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


Tags:    

Similar News