லைஃப்ஸ்டைல்
ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட்

ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட்

Published On 2020-08-13 05:41 GMT   |   Update On 2020-08-13 05:41 GMT
ஸ்வீட் கார்னில் வைட்டமின் ஏ, பி, சி, இ இருக்கிறது. அதேபோல மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டீஸ்பூன்
எண்ணெய் உப்பு



செய்முறை:

ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கு நன்றாக வேகவைத்து மசித்துகொள்ளவும்.

பாலக்கீரையை சுத்தம் செய்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

வேக வைத்த சோளத்தை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த சோளத்துடன் பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு, சிறிது உருண்டைகளாக எடுத்து வடைப்போல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட் ரெடி..!.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News