லைஃப்ஸ்டைல்
முடக்கத்தான் கீரை வாழை இலை இட்லி

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை வாழை இலை இட்லி

Published On 2020-08-12 05:19 GMT   |   Update On 2020-08-12 05:19 GMT
குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடலாம். சத்தானது. வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுக்குக் குளிர்ச்சி. முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 3 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு கைப்பிடி,
முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப்,
வாழை இலை - 1,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும்.

இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.

இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.

10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் வாழை இலை இட்லி தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News