லைஃப்ஸ்டைல்
பச்சைப்பயறு புட்டு

புரதச்சத்து நிறைந்த பச்சைப்பயறு புட்டு

Published On 2020-07-29 06:08 GMT   |   Update On 2020-07-29 06:08 GMT
பச்சைப்பயறில் இரும்புச் சத்தும் புரதச்சத்தும் அதிக அளவு உள்ளது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு - ஒரு கப்
கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்
முந்திரி - 30 கிராம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் - தலா கால் டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்



செய்முறை :

பச்சைப்பயறை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

நன்கு சூடு ஆறியதும் 2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.

இட்லிக்கு உளுந்து அரைப்பது போன்று நீர் சேர்த்து பொங்க அரைக்கவும்.

அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

வேக வைத்த இட்லியை ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.

அரை கப் நீரில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை போட்டு சூடாக்கி கரைந்ததும் வடிகட்டவும்

வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து கெட்டிப்பாகு செய்து உதிர்த்த பச்சைப்பயறு இட்லியை நெய் , தேங்காய் துருவல் , ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் , சேர்த்து நன்றாக கலக்கவும்.

நெய்யில் முந்திரி வறுத்து இறுதியாக சேர்த்துக்கொள்ளவும்.

உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய பச்சைப்பயறு புட்டு ரெடி.. 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News