லைஃப்ஸ்டைல்
பாசிப்பருப்பு பாலக்

சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் பாசிப்பருப்பு பாலக்

Published On 2020-07-23 05:42 GMT   |   Update On 2020-07-23 05:42 GMT
பாசிப்பருப்பு, பாலக்கீரை சேர்த்து சேர்த்து செய்யும் இந்த ரெசிபியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் சப்பாத்திக்கும் சிறந்த சைடிஷ் இது.
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - ஒரு கப்
தயிர் - 2 டீஸ்பூன்
பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேக வைத்துகொள்ளவும்.

பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம்,  பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் சுத்தம் செய்த கீரை, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.

பின்பு தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இது சப்பாத்திக்கு சிறந்த சைட்டிஷ்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News