லைஃப்ஸ்டைல்
ஆலிவ் குடைமிளகாய் சாலட்

புத்துணர்ச்சி தரும் ஆலிவ் குடைமிளகாய் சாலட்

Published On 2020-07-21 05:45 GMT   |   Update On 2020-07-21 05:45 GMT
காலையில் இந்த சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியும் இருக்கலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆலிவ் - 1/2 கப்
சிவப்பு குடைமிளகாய் - 1
பச்சை குடைமிளகாய் - 2
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்க
ஆலிவ் ஆயில் - சிறிதளவு
மிளகு - சுவைக்க



செய்முறை :

வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடைமிளகாயை வைத்து கொள்ளவும்.

அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும்.

அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும்.

அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.

பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்த்து பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News