லைஃப்ஸ்டைல்
கேரட் டிரை ஃப்ரூட்ஸ் சாதம்

கேரட் டிரை ஃப்ரூட்ஸ் சாதம்

Published On 2020-07-20 05:35 GMT   |   Update On 2020-07-20 05:35 GMT
தினமும் கேரட்டை அதிகம் சாப்பிட்டால், பார்வைக் கோளாறு வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகள், கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது. இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:

கேரட் - 3  பெரியது
அரிசி - 1  கப்
வெங்காயம் - 1
கிராம்பு - 2
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
ஏலக்காய் - 6
பட்டை - 2 இன்ச்
நட்ஸ் - 5 டேபிள் ஸ்பூன் (பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவை)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்



செய்முறை:

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

அரிசியை கழுவி அடுப்பில் வைத்து உதிரியாக  வேக வைத்து ஆற வைக்கவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப,மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.  

கேரட் வேக சற்று தண்ணீர் தெளித்து 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின் தீயை குறைவில் வைத்து, ஆறவைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்த பின் இதன் மேல் கொத்தமல்லி, நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

சூப்பரான சத்தான கேரட் டிரை ஃப்ரூட்ஸ் சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News