பெண்கள் உலகம்
மிக்ஸ்டு மில்க் ஷேக்

சோயா‌ ஃப்ரூட் மிக்ஸ்டு மில்க் ஷேக்

Published On 2020-07-14 10:46 IST   |   Update On 2020-07-14 10:46:00 IST
குழந்தைகளுக்கு சத்தான சுவையான மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் சோயா‌ ஃப்ரூட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சோயா பால் - ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்,
நாட்டு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).



செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும்.

இதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும்.

பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும்.

ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News