லைஃப்ஸ்டைல்
மிளகு சுக்கு தோசை

சளி, இருமலை குணமாக்கும் மிளகு சுக்கு தோசை

Published On 2020-06-11 06:18 GMT   |   Update On 2020-06-11 06:18 GMT
சளி இருமல் தொல்லை இருப்பவர்களுக்கு இந்த மிளகு சுக்கு தோசை ஒரு சிறந்த வரப்பிரசாதம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பச்சரிசி - ஒரு கப்
சுக்குத் தூள் - இரண்டு ஸ்பூன்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
கெட்டித் தயிர் - ஒரு கப்
மிளகு - இரண்டு ஸ்பூன்
சீரகத் தூள் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை

உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை தூசு கல் நீக்கி களைந்து சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு, தயிர் ஆகிய இவற்றை சேர்த்துப் புளிக்க விடவும்.

தோசையாக ஊற்றும் சமயத்தில் சுக்குத் தூள், மிளகு சீரகத் தூள் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதோ இப்போது சுவையான மிளகு சுக்கு தோசை தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News