லைஃப்ஸ்டைல்
லெட்டூஸ் பொரியல்

மலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல்

Published On 2020-05-19 06:18 GMT   |   Update On 2020-05-19 06:18 GMT
நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.
லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ' 'கே’ போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

தேவையான பொருட்கள் :

லெட்டூஸ் இலை - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று (பொடியாக
வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

லெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.

பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.

மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News