லைஃப்ஸ்டைல்
கொள்ளு பச்சைப் பயறு சுண்டல்

கொள்ளு பச்சைப் பயறு சுண்டல்

Published On 2020-05-02 05:28 GMT   |   Update On 2020-05-02 05:28 GMT
இந்த சுண்டல் வெயிலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். இன்று இந்த சுண்டல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்
பச்சை பயறு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவில் - விரும்பிய அளவு

தாளிக்க

எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 3



செய்முறை

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொள்ளுவையும், பச்சைப் பயறையும் இரவே ஊறவையுங்கள். இல்லையென்றால் காலையில் ஊறவைத்தால் மாலையில் செய்யலாம். இரண்டையும் குக்கரில் வேகவைத்துத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.

சுண்டலைச் சேர்த்து, உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

அடுத்து  அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்துகொள்ளலாம்.

சத்தான சுவையான கொள்ளு பச்சைப் பயறு சுண்டல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News