பெண்கள் உலகம்
கொள்ளு லட்டு

சத்தான கொள்ளு லட்டு

Published On 2020-04-30 11:13 IST   |   Update On 2020-04-30 11:13:00 IST
வீட்டில் இருக்கும் சிறிவர், பெரியோர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கொள்ளு லட்டு செய்து கொடுக்கலாம். இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கொள்ளு - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
நெய் - சிறிதளவு.
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்



செய்முறை :

வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்

பிறகு நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.

சுவையான கொள்ளு லட்டு தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News