லைஃப்ஸ்டைல்
சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை

சத்தான ஸ்நாக்ஸ் சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை

Published On 2020-04-11 06:32 GMT   |   Update On 2020-04-11 06:32 GMT
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்

கம்பு - ஒரு கப்,
தினை - ஒரு கப்,
கேழ்வரகு - ஒரு கப்,
ஏலக்காய் - 4,
கருப்பட்டி - 2 கப்,
தேங்காய்த் துருவல் - 1 கப்



செய்முறை

கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை கொழுக்கட்டையாக பிடிக்க வேண்டும்.

பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லித் தட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News