லைஃப்ஸ்டைல்
பீட்ரூட் பருப்பு ரசம்

சத்து நிறைந்த பீட்ரூட் பருப்பு ரசம்

Published On 2020-03-24 05:37 GMT   |   Update On 2020-03-24 05:37 GMT
பீட்ரூட்டில் சாலட், பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட்டை வைத்து சத்தான சுவையான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி - 2,
புளி - நெல்லி அளவு,
மிளகு - 1 தேக்கரண்டி,
தனியா - 2 டீஸ்பூன்,
மிளகாய் வத்தல் - 4,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 2 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் - 2 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு.



செய்முறை

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

துவரம் பருப்பை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

பருப்புடன், தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.

புளியை கரைத்துக்கொள்ளவும்.

மிளகு, தனியா, 1/2 தேக்கரண்டி சீரகம், வத்தலை கடாயில் போட்டு வாசனை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்  போட்டு தாளித்த பின்னர் தூள் செய்த பொடி சேர்க்கவும்.

பின்னர் வேக பருப்பு, தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் புளிக்கரைசல், பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு நுரைகூடியதும் இறக்கவும்.

பரிமாறும் பாத்திரத்தில் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.

சத்தான சுவையான பீட்ரூட் பருப்பு ரசம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News