லைஃப்ஸ்டைல்
கேழ்வரகு குலுக்கு ரொட்டி

வயதானவர்களுக்கு உகந்த கேழ்வரகு குலுக்கு ரொட்டி

Published On 2020-03-10 04:54 GMT   |   Update On 2020-03-10 04:54 GMT
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகு மாவில் குலுக்கு ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - அரை கப்
பச்சரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த வெல்லம் - கால் கப்
பொடித்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு



செய்முறை:

கேழ்வரகு மாவை லேசாக வறுத்து அதனுடன் பச்சரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் நெய் தடவி கனமான தோசைகளாக வார்க்கவும்.

பின்னர் அதனை சிறு துண்டுகளாக ரொட்டி போல் வெட்டிக்கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாகு ஆக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

பின்னர் அதனை மீண்டும் கொதிக்க வைத்து ஓரளவு கட்டி பதம் வந்ததும் வேர்க்கடலை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

இந்த கலவையுடன் ரொட்டி துண்டுகளை கலந்து பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News