லைஃப்ஸ்டைல்
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி

முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி

Published On 2020-03-07 08:31 GMT   |   Update On 2020-03-07 08:31 GMT
சப்பாத்தி, நாண், பூரியுடன் சாப்பிட முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கப்,
முட்டைக்கோஸ் - 2 கப்,
பச்சை மிளகாய் - 4,
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - சிறிது,
தக்காளி - 1,
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாப்பொடி - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.



செய்முறை

முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை கழுவி அதில் போடவும்.

பாசிப்பருப்புடன் பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாப்பொடி, முட்டைக்கோஸ், தக்காளி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும்.

பின் குக்கரைத் திறந்து உப்பு போட்டு நன்றாக மூடி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்து சப்ஜியில் ஊற்றவும்.

கொத்தமல்லி தூவி சூடாக சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.

சூப்பரான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News