லைஃப்ஸ்டைல்
தாளிச்ச தோசை

விரைவில் செய்யலாம் தாளிச்ச தோசை

Published On 2020-03-05 04:24 GMT   |   Update On 2020-03-05 04:24 GMT
அடிக்கடி தோசை சாப்பிட்டு அலுத்தவர்கள் தாளிச்ச தோசை செய்து சாப்பிடலாம். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தோசை மாவு - ஒரு கப்
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:


இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாயை தாளித்து மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும்.

தாளிப்பு தோசை ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.

பச்சை மிளகாயை விரும்பாதவர்கள் மோர் மிளகாயைப் பயன்படுத்தலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News