லைஃப்ஸ்டைல்
பாகற்காய் கோதுமை புலாவ்

பாகற்காய் கோதுமை புலாவ்

Published On 2020-02-26 04:11 GMT   |   Update On 2020-02-26 04:11 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமை, பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று இந்த இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

விதை நீக்கி பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்
கோதுமை ரவை - ஒரு கப்
சிறிய பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
பட்டை - சிறிய துண்டு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கிராம்பு ஏலக்காய் - தலா 2
பிரியாணி இலை - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி (சேர்த்து) - கால் கப்
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும்.

அதனுடன் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறி சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து புலாவில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இரும்புச் சத்துமிக்க இந்த புலாவ் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News