லைஃப்ஸ்டைல்

பாலக் கீரை - கொண்டைக்கடலை சாலட்

Published On 2018-09-28 04:35 GMT   |   Update On 2018-09-28 04:35 GMT
இந்த சாலட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது.
தேவையான பொருட்கள் :

பாலக் கீரை - 1 கப்
தக்காளி - 1
கொண்டைக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
பேபி கார்ன் - 6 துண்டுகள்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - பாதி



செய்முறை :

தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

பேபி கார்ன், கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி சுடு தண்ணீரில் 1 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாலக்கீரை, தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து இதில் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும்.

மேலும், வெட்டி வைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக இந்துப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

சூப்பரான சத்தான பாலக் கீரை - கொண்டைக்கடலை சாலட் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News