லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி

Published On 2017-07-06 03:31 GMT   |   Update On 2017-07-06 03:31 GMT
தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

கோதுமைமாவு - 1/2 கப்
கேழ்வரகு  மாவு - அரை கப்பிற்கு சிறிது குறைவாக எடுக்கவும்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு மாவை போட்டு 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* பிசைந்து வைத்த மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி ரெடி.

* இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News