லைஃப்ஸ்டைல்

மாங்காய் சட்னி செய்வது எப்படி

Published On 2016-05-03 02:14 GMT   |   Update On 2016-05-03 03:32 GMT
கோடை காலத்தில் கிடைக்கும் மாங்காயை கொண்டு எளிய முறையில் சட்னி செய்யலாம்.
தேவையான பொருட்கள் :

மாங்காய் - 1
தேங்காய் - 3 பத்தை
பச்சை மிளகாய் -  4
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவுதாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 15 இலைகள்

செய்முறை :

* மாங்காய் மற்றும் தேங்காவை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

* தேங்காயுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து மிக்சியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாங்காய் சட்னியில் கொட்டவும்.

* இப்போது சுவையான மாங்காய் சட்னி தயார்.

-  உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News