பெண்கள் உலகம்

சத்தான கோதுமை ரவை கிச்சடி செய்வது எப்படி

Published On 2016-04-25 10:21 IST   |   Update On 2016-04-25 10:21:00 IST
மிகவும் எளிமையான கோதுமை ரவை கிச்சடி செய்துவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவா - 1 கப் (சம்பா கோதுமை)
தண்ணீர் - 5 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1 சிறிதாக
பச்சை மிளகாய்   -  1
இஞ்சி  - 1 துண்டு
பூண்டு பல் -  2 சிறிதாக
காய்கள் கலவை  - கேரட், பீன்ஸ், பட்டானி, துருவிய கோஸ் 1 கப் (விரும்பினால்)

தாளிக்க :

கடுகு - 2 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு   - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை   - 1 கொத்து
கொத்தமல்லித்தழை  - சிறிதளவு நறுக்கியது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு   - தேவைக்கேற்ப.

செய்முறை :

* ரவையில் சிறிது எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுக்கவும்.

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயம் போட்டு வதக்கவும்.

* பின்னர் இஞ்சி, தக்காளி சேர்த்து சிறிது வதக்கிய பின், காய்கறிகளையும் சேர்த்து வதக்கிய பின் உப்பு சேர்த்து மூடியிட்டு வேகவிடவும். காய்கறி பாதி வெந்ததும், தண்ணீரை அளந்து ஊற்றவும்(1 கப்புக்கு 5 கப்).

* தண்ணீர் கொதிவந்ததும் வறுத்து வைத்த ரவையை சேர்த்து கட்டி சேராமல் கிளறி மூடியிட்டு வேகவிடவும்.

* ரவை நன்கு வெந்ததும் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

* தேங்காய் சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Similar News