பொது மருத்துவம்

திரிகடுகு சூரணத்தின் பயன்கள்...

Update: 2022-10-03 08:28 GMT
  • திரிகடுகு மருந்து நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாகக் கிடைக்கின்றன.
  • திரிகடுகு மருந்தை நம்முடைய வீட்டிலேயே மிக எளிமையாக செய்து கொள்ள முடியும்.

திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் 3 மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் சேர்ந்த கலவை தான்..

திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்பொருட்கள் அடங்கியதுதான் திரிகடுகம். எல்லோருடைய வீடுகளிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு இயற்கை மருந்து என்றால் அது இந்த திரிகடுகம்தான். திரிகடுகு சூரணம் என்ற பெயரில் ரெடிமேடாக கிடைத்தாலும் வீட்டில் எளிதாக செய்து கொள்ள முடியும். திரிகடுகு மருந்து நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் இந்த திரிகடுகு மருந்தை நம்முடைய வீட்டிலேயே மிக எளிமையாக செய்து கொள்ள முடியும்.

நல்ல தரமான சுக்கை வாங்கி, அதன் தோலை நீக்கிவிட்டு வெறும் வாணலியில் இட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கை அப்படியே போட்டு மிக்சியில் அரைத்தால் அரைபடாது. லேசாக வறுத்துப் போட்டால் எளிதாக பொடித்துவிட முடியும்.

சுக்கை போலவே மிளகு மற்றும் திப்பிலி இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு ஆறியதும் இந்த மூன்றையும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து நன்கு பொடி செய்து சலித்து எடுக்க வேண்டும். இப்போது திரிகடுகு சூரணம் ரெடி. இதை ஒருகாற்று புகாத பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

திரிகடுகு சூரணம் காரத்தன்மை கொண்டது. 12 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் ஒரு கிராம் அளவுக்கு திரிகடுகு சூரணத்தை எடுத்து வெந்நீரில் கலந்து தேன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது தேனில் குழைத்து அப்படியே சாப்பிடலாம். 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களாக இருந்தால் 2 சிட்டிகை அளவு மட்டும் எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். இதை காலை மற்றும் மாலை என தினம் இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும், நோய்களும் அண்டாது.

Tags:    

Similar News