- இறக்கைகளை நீக்கி, வெயிலில் உலர்த்தி, வறுத்து பொடியாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.
- பல்வேறு சத்துக்கள் அடங்கி இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
கரையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளருகிறது ஈசல்கள். உலகின் சில நாடுகளில் சுவையான சத்தான உணவாக இருக்கிறது. ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட காலம் முடிந்து முதல் மழை தொடங்கும் போது அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகளை வைத்து அதற்கு கீழே நீர் நிரம்பிய பாத்திரத்தை பொறியாக வைத்து ஈசல்களை பிடிக்கின்றனர்.
இதன் பின்னர் இறக்கைகளை நீக்கி, வெயிலில் உலர்த்தி, வறுத்து பொடியாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்கின்றனர். இந்த ஈசல் பொடியில் வேறு எந்த இறைச்சியிலும் காணப்படாத அளவுக்கு அதிக புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்பட பல்வேறு சத்துக்கள் அடங்கி இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு, இதய பலவீனத்தை நீக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம், முக வாதம் ஆகியவற்றுக்கு எண்ணெயில் ஈசலை காய்ச்சி பயன்படுத்தினால் நல்ல பலன் தரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
இன்றும் கூட மழை காலங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் ஈசலை பிடித்து அரிசியுடன் சேர்த்து வறுத்து உண்ணும் பழக்கம் உள்ளது.