பொது மருத்துவம்

கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Published On 2025-05-24 09:24 IST   |   Update On 2025-05-24 09:24:00 IST
  • கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.
  • கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிவி பழம் பச்சை நிறத்தில் சதைப்பற்றுள்ள பழம். அதன் தனித்துவமான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மகத்தான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது.

ஒரு கிவி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

மருத்துவர்கள் தினமும் ஒரு கிவி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது.

தினமும் ஒரு கிவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிவி பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்று கோளாறு மற்றும் வலி போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இரண்டு சிறிய கிவி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. தோலுடன் கிவியை சாப்பிட்டால் அதிக நார்ச்சத்து பெறலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. கரையக்கூடிய நார்ச்சத்து ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்கி செரிமானத்தை மெதுவாக்குகிறது.

கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.

கிவி பழங்களில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. இது கண்புரை உருவாகும் அபாயத்தைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.

கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகரந்த ஒவ்வாமை மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News