பெண்கள் உலகம்
திராட்சை

இதய பாதிப்பை தடுக்கும் திராட்சை

Published On 2021-10-24 09:00 IST   |   Update On 2021-10-22 13:08:00 IST
பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் இந்த திராட்சை பழம், இதய பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் உண்டு.
திராட்சை பழம் பச்சை, வெள்ளை, சிவப்பு, கருப்பு என பல நிறங்களில் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஓரளவுக்கு உள்ளன.

அதேபோல் தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் இந்த திராட்சை பழம், இதய பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.

திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்த குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.

இந்த ரசாயன பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களை தளர்வுற செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Similar News