லைஃப்ஸ்டைல்
பற்களுக்கு வேர் சிகிச்சை

பற்களுக்கு வேர் சிகிச்சை

Published On 2021-10-07 07:27 GMT   |   Update On 2021-10-07 07:27 GMT
காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும்.
முன்பெல்லாம் பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டை கொண்டு சொத்தையை அடைப்பார்கள். அல்லது அந்த பல்லை நீக்கிவிடுவார்கள்.

இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும்.

எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘பில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது என்றும், சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’, ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் கலந்த வேதிப்பொருளை கொண்டு நிரப்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித்தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்கு பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும் எனவும் கூறுகிறார்கள்..

காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. ஆரோக்கியமான பற்களுக்கு பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

வைட்டமின்-சி, வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு போன்றவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச்சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பற்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
Tags:    

Similar News