லைஃப்ஸ்டைல்
செர்ரி பழம்

செர்ரி: புளிக்கும், இனிக்கும், சுவைக்கும்..

Published On 2021-09-05 03:13 GMT   |   Update On 2021-09-05 03:13 GMT
ஏராளமான சத்துப்பொருட்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.
கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப்பொருட்களையும், நோய் எதிர்ப்புப் சக்தியையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

* இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட செர்ரி பழங்கள் உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நலம்மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

* செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தவை.

* ‘ஆன்தோசயனின் கிளைகோசிட்’ எனும் நிறமி செர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு சிகப்பு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படக் கூடியது.

* புற்றுநோய், உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.

* ‘மெலடானின்’ எனும் நோய் எதிர்ப்பொருள் செர்ரி பழத்தில் அதிகமாக இருப்பதால் வலியை கட்டுப்படுத்துவதிலும், தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் நோய்த் தடுப்புபணியை செய்கிறது.

* பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும்.

* புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் வழங்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன.

சாப்பிடும் முறை:-

செர்ரி பழங்களை கழுவி விட்டு அப்படியே சாப்பிடலாம். பீச் பழம், அன்னாசிப் பழம், திராட்சை போன்ற கனிகளுடன் செர்ரியை சேர்த்து பழக்கலவையாகவோ, பழ சாலட்டாகவோ செய்தும் சுவைக்கலாம். கேக், ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் உலர்த்தப்பட்ட செர்ரி சேர்க்கப்படுகிறது

மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் ‘அசெரோலா’ வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களைவிட ‘வைட்டமின் சி’ மற்றும் ‘வைட்டமின் ஏ’ மிகுதியாகக் கொண்டது.
Tags:    

Similar News