லைஃப்ஸ்டைல்
எச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல

எச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல

Published On 2021-02-24 06:28 GMT   |   Update On 2021-02-24 06:28 GMT
கூகுளையே டாக்டர் என நினைத்து அதில் அறிகுறியை குறிப்பிட்டு அதற்கான தீர்வை அறிய முனைந்தால் அதிகமாக பயமும், பீதியும் மனோவியாதியும் தான் வந்து சேரும்.
கூகுளில் நம் உடலில் உள்ள உபாதைகளை தேடி என்ன வியாதி என்ன வைத்தியம் என்று அறிந்து கொள்ள முயல்வதும் யூடியூப்பில் வரும் நம் ராசியின் பலாபலன்கள் அனைத்தும் நமக்கு நிகழப்போவதாக நம்பிக்கொள்வது ஒன்று தான்.

உதாரணமாக...

டாக்டர் எனக்கு கண்ணில் கிளக்கோமானு நினைக்கிறேன்.

ஏன் அப்படி நினைக்கிறீங்க சார்..

தூரத்துல உள்ளது தெரியுது. காலுக்கு பக்கத்துல கீழ உள்ளது தெரியல டாக்டர். கூகுள்ள அப்படி தான் போட்டிருந்தது.

இல்லீங்க, நல்லா டெஸ்ட பண்ணிட்டேன் கிளக்கோமா இல்ல. நார்மலா இருக்கீங்க..

இல்ல டாக்டர் கூகுள்ள...

சார் உங்க தொப்பை தரையை மறைக்குது சார்...கூகுளுக்கு தெரியுமா உங்க 4xl size தொப்பை பற்றி...

இது மாதிரியான உரையாடல்கள் இன்று டாக்டர் கிளினிக்குகளில் சகஜம்...

இருமல் என்று தேடினாலே டிபி போன்ற பெரிய நோய்களை சொல்லி பயமுறுத்தும் கூகுள்.

கூகுளில் சர்ச் செய்து மருந்துகளின் பக்கவிளைவு லிஸ்டை படித்தால் மைக்கேல் மத காமராஜன் மளிகைக்கடையில் படிக்கும் லிஸ்டைப்போலிருக்கும். எந்த மருந்தையுமே சாப்பிட முடியாது.

கூகுளில் சந்தேகங்களை அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளப்பார்க்கலாம். அதுவும் உங்கள் டயக்னோசிஸ் என்ன என்று டாக்டர் சொன்ன பிறகு அதை பற்றி தெரிந்து கொள்ள பார்க்கலாம்.

கூகுளையே டாக்டர் என நினைத்து அறிகுறிகளை குறிப்பிட்டு அதற்கான தீர்வை அறிய முனைந்தால் அதிகமாக பயமும், பீதியும் மனோவியாதியும் தான் வந்து சேரும்.

ஏனெனில்சாதாரண அறிகுறிகளுக்கு கூட உச்சக்கட்ட வியாதி வரை கூகுள் விளக்குகிறது.

எப்போதும் இருப்பதிலேயே பெரிசுக்கு ஆசைப்படும் நம் மனமோ வியாதியிலும் உச்சக்கட்ட வியாதிகளை பக்கவிளைவுகளை உருவகப்படுத்திக்கொள்ளும்.

ஆகவே உங்களை நேரில் பரிசோதிக்கும் உங்கள் டாக்டருக்கு கூகுள் என்றுமே இணையாகாது.
Tags:    

Similar News