லைஃப்ஸ்டைல்
மனக்கவலையை போக்கும் நறுமண எண்ணெய்

மனக்கவலையை போக்கும் நறுமண எண்ணெய்

Published On 2020-06-12 10:05 GMT   |   Update On 2020-06-12 10:05 GMT
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தேவையில்லாமல் மனக்கவலைக்கு ஆளாகிறார்கள். சிலவகை நறுமண எண்ணெய்களை கொண்டு உடலையும், மனதையும் ஆசுவாசப்படுத்தலாம். அவை மனதிற்கு இதமளிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தேவையில்லாமல் மனக்கவலைக்கு ஆளாகிறார்கள். ஏதாவதொரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் னோடு தன்னையோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையோ மனத்திரையில் ஒப்பிட்டுப்பார்த்து தங்களுக்கும் அப்படி ஏதேனும் நடந்துவிடுமோ என்று பயப்படவும் செய்கிறார்கள். மனஅழுத்தம், பதற்றம் போன்ற உணர்வுகள் மனக்கவலையை அதிகரிக்கச் செய்துவிடும். அதில் இருந்து மீளாவிட்டால் கடுமையான மன நோயாக மாறிவிடும். சிலவகை நறுமண எண்ணெய்களை கொண்டு உடலையும், மனதையும் ஆசுவாசப்படுத்தலாம். அவை மனதிற்கு இதமளிக்கும்.

லாவண்டர்: இதற்கு உடல் மற்றும் மனதில் உண்டாகும் சோர்வை போக்கும் தன்மை இருக்கிறது. மனம் சார்ந்த பல்வேறு அறிகுறிகளை கட்டுப்படுத்தி பதற்றம், மனக் கவலையை விரட்டவும் உதவும். குளிக்கும்போது சிறிதளவு லாவண்டர் எண்ணெய்யை தண் ணீரில் கலந்து குளித்துவரலாம். வீட்டின் அறையில் நறுமணம் வீசுவதற்கும் பயன்படுத்தலாம்.

மல்லிகை: இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி டிப்ரெசண்ட் தன்மை இருக்கிறது. பதற்றத்தின் அறிகுறிகளை எதிர்த்து போராடவும் உதவும். மனஅழுத்த எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு களைக் கொண்டுள்ளது. மனதை அமைதியாக்கி தூக்கத்தை மேம்படுத்தவும் செய்யும். தூக்கமின்மை முதல் மனச்சோர்வு வரை பல பிரச்சினை களுக்கு தீர்வு தரும். மல்லிகை எண்ணெய்யுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து கழுத்து, கைகளில் தடவி வரலாம். தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் களுக்கு நிவாரணம் தரும். வீட்டுக்கு நறுமணமும் ஏற்படுத்தி கொடுக்கும்.

ரோஜா: இதன் வாசம் சோர்வை போக்கி மனதை இதமாக்கும். மனக்கவலையை போக்குவதற்கு ரோஜா எண்ணெய் சிறந்த தேர்வாக அமையும் என்று சில ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன. இதனை பயன் படுத்துவதன் மூலம் மன அழுத்தம், மன சோர்வு, பதற்றம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

சாமந்தி: சாமந்தி டீயை போல சாமந்தி எண்ணெய் யும் ஏராளமான உடல்நல நன்மைகளை கொண்டி ருக்கிறது. இந்த எண்ணெய்யுடன் சிறிதளவு நீர் கலந்து உடலில் தடவி வரலாம். மன அமைதியை மேம்படுத்தும். மனக்கவலை, பதற்றத்தை குறைக்கும். சாமந்தி டீ பருகுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். நன்றாக தூக்கமும் வரும்.

எலுமிச்சை: இதன் வாசனை மனநிலையை மேம்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை எலுமிச்சை எண்ணெய்க்கு இருக்கிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் எலுமிச்சை எண்ணெய்யை கலந்து உபயோகப் படுத்தலாம். 
Tags:    

Similar News