பெண்கள் உலகம்

தூங்கி எழும் பொழுது கை-கால் அசைக்க முடியவில்லையா?

Published On 2019-01-22 08:35 IST   |   Update On 2019-01-22 08:35:00 IST
சிலருக்கு தூக்கத்தில் திடீரென முழிக்கும் பொழுதோ, தூங்கி எழும் பொழுதோ சில நொடிகளோ அல்லது ஓரிரு நிமிடங்களோ கை-கால் அசைக்க முடியாதது போல் இருக்கும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு தூக்கத்தில் திடீரென முழிக்கும் பொழுதோ, தூங்கி எழும் பொழுதோ சில நொடிகளோ அல்லது ஓரிரு நிமிடங்களோ கை-கால் அசைக்க முடியாதது போல் இருக்கும். சிலருக்கு இரவில் இவ்வாறு ஏற்படும்போது ஏதோ நகர்வது போலக் கூடத் தோன்றும். இது சில நொடிகளிலேயே சரியாகி விடும். இவ்வாறு ஏற்படுவதன் காரணம்.

* தூக்கமின்மை * பரம்பரை * அதிக ஸ்ட்ரெஸ்

* மன உளைச்சல் * தூங்கும் முறையில் மாறுபாடு என இருக்கலாம். இதனை சரி செய்ய

* முதலில் மனதினை ‘ரிலாக்ஸ்’யாக வையுங்கள். இது மிக மிக அவசியம்.

* பகல் நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருக்காதீர்கள். சுறுசுறுப்பாய் நடந்தபடி இருங்கள்.

* தியானம் பழகுங்கள்.

குச்சிகளும், கற்களும், நவீன துப்பாக்கிகளும் ஏற்படுத்தும் காயத்தினை விட வார்த்தைகளால் ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்தும் மனக்காயங்கள் அவரை அதிக மன உளைச்சலுக்கு உருவாக்கி நோயாளி ஆக்கி விடுகின்றது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. முதலில் இதனை இந்திய பெற்றோர் களுக்குத்தான் அறிவுறுத்த வேண்டும. அக்கறை என்ற பெயரில்

* சதா மிரட்டிக் கொண்டே இருப்பது

* தகாத வார்த்தைகள், கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவை இளம் நெஞ்சங்களில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தி அவர்களை எப்போதும் மன உளைச்சல் உள்ளவராக மாற்றி விடும். எனவே பெற்றோர்களே உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News