லைஃப்ஸ்டைல்

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?

Published On 2017-05-23 03:04 GMT   |   Update On 2017-05-23 03:04 GMT
தைராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பதனை ஹைப்போதைராய்டிஸம் என்று கூறுகின்றோம். ஆண்களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது.
திடீரென நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தாலும், மூளையில் ஏதோ குழம்புவது போல் இருந்தாலம், செயலில் ஒரு தடுமாற்றம் இருந்தாலும், எடை திடீரென அதிகம் கூடுவது (அல்லது) குறைவது போல் இருந்தாலும், முடி திடீரென அதிகமாக கொட்டினாலும், பரபரப்பு, அதிக வியர்வை இவையெல்லாம் இருந்தாலும் தைராய்டு சரிவர இயங்காததன் அறிகுறிகளாக இருக்கக் கூடும். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இத்தனை முக்கியத்துவம் பெறும் இந்த தைராய்டு சுரப்பி நம் உடலில் எங்கு இருக்கின்றது என்று அறிந்து கொள்வோம்?

கழுத்தின் முன்புறம் ஆடம் ஆப்பிள்ளுக்கு கீழே தைராய்டு சுரபி உள்ளது. 4 செ.மீ. உயரம், 18 கிராம் எடையும் உள்ள இந்த சுரப்பி வண்ணத்து பூச்சி போன்ற உருவம் கொண்டது. மென்மையானது. இச்சுரப்பியில் சிறிது வீக்கம் ஏற்பட்டாலும் கழுத்தில் தெரியும்.

நாம் உண்ணும் கொழுப்பு சத்தும், மாவு சத்தும் பல மாற்றங்களாகி சக்தியால் உடல் திசுக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. தைராய்டு ஹார்மோன் இந்த மாற்றத்திற்கான வேலைகளைக் செய்கின்றது. மெட்ட பாலிஸம், வளர்ச்சி, உடலின் சூடு, தசைகளின் வலு, இருதயம், மூளை, சிறுநீரகம், பிறப்புறுப்புகள் இவற்றின் ஆரோக்கியத்தினை காக்கிறது. கரு வளர்ச்சிக்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் இந்த ஹார்மோன் பெரிதும் உதவுகின்றது. இந்த ஹார்மோன் டி3, டி4 என வகைப்படுகின்றது. முறையான ஹார்மோன் அளவு ரத்தத்தின் டி.எஸ்.எச். என்ற ஹார்மோனை பிட்யூட்டரி சுரக்கின்றது.

‘தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லை என்றால் நீங்களும் வேலை செய்ய மாட்டீர்கள். இச்சுரப்பி சரிவர வேலை செய்யவில்லை என்றால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். ‘இருதய நோய், கருத்தரிப்பின்மை, சதைகள் வலுவற்று இருத்தல், எலும்பு தேய்மானம், கோமா மற்றும் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் தைராய்டு சுரப்பி குறைபாடு பரம்பரைதன்மை காரணமாகக் கூட ஏற்படலாம்.

சில பாதிப்புகளை மருத்துவ ரீதியாகவே பரிசோதித்து கூற முடியும். ஆனால் அறிய வேண்டிய பல செய்திகளை இக்கட்டுரையில் அறிவோம். தைராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பதனை ஹைப்போதைராய்டிஸம் என்று கூறுகின்றோம். ஆண்களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. 60 வயதினைத் தாண்டும் பெண்கள் 17- சதவீதமும், ஆண்கள் 9 சதவீதமும் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.



தைராய்டு ஹார்மோன் குறைவு ஏற்படும் பொழுது

* எப்பொழுதும் சோர்வு
* குளிர்தாங்க முடியாமை
* மெத்தனம்
* நாடி துடிப்பில் வேகம் குறைவு
* வறண்ட சருமம்
* ஒடியும் நகம்
* குரல் தடிப்பு
* அதிக ரத்த போக்குடைய மாதவிடாய்

* மறதி
* பசியின்மை
* அதிக எடை கூடுதல்
* மன அழுத்தம்
* வறண்ட முடி
* முடி கழண்டு கொட்டுதல்
* மூட்டு வலி
* ரத்தத்தில் கொழுப்பு அதிகம்
என பல அறிகுறிகளைக் காட்டும்.

தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தால் இதனை ஹைப்பர் தைராய்டிஸம் என்கின்றோம்.

* அதிக தாகம்
* அதிக பசி
* சூடுபொறுக்க முடியாமை
* அசதி
* நடுக்கம்
* எரிச்சல்
* அதிக வியர்வை
* எடை குறைதல்

* தசை பலவீனம்
* முறையான தூக்கமின்மை
* அடிக்கடி வெளிப்போக்கு
* கண் பார்வை தொந்தரவு
* முறையான மாதவிடாய் இன்மை
* உடலில் அரிப்பு ஆகியவை ஏற்படும்.
* தைராய்டு ஹார்மோன் அதிகம் இருந்தாலும் மனச்சோர்வு, இருதய பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

தைராய்டு பாதிப்பு உடையவர்களில்
* 10-ல் 8 பேர் பெண்களாக இருக்கின்றனர்.
* நீரிழிவு பாதிப்பு உடையவர்களில் 20- சதவீதம் நபர்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்படுகின்றது.
* தைராய்டு புற்று நோய் பரம்பரை பாதிப்பு காரணமாக ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
* அயோடின் குறைபாடு என்பது

தைராய்டு காய்டர்:

தைராய்டு சுரப்பியின் வீக்கம் காரணமாக கழுத்து வீங்கி தெரியும். 90 சதவீதம் காய்டர்கள் அயோடின் குறைபாடு காரணமாகவே ஏற்படுகின்றன. இதன் குறைபாடுகளை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

தைராய்டு நாட்யூல்:

தைராய்டு சுரப்பிக்குள் முறையற்ற தைராய்டு செல்களில் வளர்ச்சி ஏற்படுவதனை தைராய்டு நாட்யுல் என்கின்றோம். இது அநேக நபருக்கு புற்று நோய் அற்றதாகத்தான் இருக்கும் மிகவும் வயது கூடும் பொழுது இவை புற்று நோயாக மாறும் வாய்ப்பு உண்டு. இதனை முறையான பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.



க்ரேவ்ஸ் நோய் பாதிப்பு:

இதுவும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்புதான் பரம்பரை, சுற்றுப்புற சூழ்நிலை அதிக மன உளைச்சல், கிருமி தாக்குதல், ஆகியவை காரணங்கள் எனக்கூறலாம். புகை பிடித்தல் இதனை அதிகரிக்க செய்யும். தைராய்டு ஹார்மோன் அதிகரிப்பது அதன் அறிகுறிகளாக இருக்கும் தைராய்ட் சுரப்பி வீங்கி விடும். கண்கள் வெளிவந்தது போல் இருக்கும். மருத்துவ பரிசோதனையும் அதற்கேற்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றது. ஆரம்ப கால அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

பொதுவில் ரத்த பரிசோதனை செய்து ஜி2, ஜி4, ஜிஷிபி அளவினை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. தேவைப்படின் கூடுதல் பரிசோதனையும் செய்வதுண்டு. மருத்துவ சிகிச்சை மூலம் பாதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை தேவை. முறையான மருத்துவ பரிசோதனையும் தேவை.

ஆக தைராய்டு சுரப்பியினைப் பொறுத்தவரை

* குறைந்த ஹார்மோன் பாதிப்பு
* அதிக ஹார்மோன் பாதிப்பு
* வீக்கம் (அயோடின் குறைபாடு)
* புற்றுநோய்
* சாதாரண கட்டிகள்
போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதனைப் பார்க்கின்றோம்.

* அயோடின், ஸிங்க், செயினியம், இரும்பு, பி வைட்டமின்கள் அடங்கிய சத்து மாத்திரைகளை மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
* க்ளூடன் இல்லாத உணவு-அவசியம் ஏற்படின் எடுத்துக் கொள்ளலாம்.
* 8-10 மணி நேர தூக்கம் மிகவும் உதவும்.
* உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* அசைவ உணவினை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* மீன் உணவினை எடுத்துக் கொள்ளலாம்.
* சர்க்கரை அதிகம் சேர்த்து கொள்ளக் கூடாது. டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத் தப்பட்ட உணவுகள் வேண்டாம்.
* சிறிதளவு வெண்ணை சேர்ப்பது நன்மை பயக்கும்.
* அதிகம் செல்போன் பயன்படுத்தாது இருப்பது நல்லது.
* யோகா சிறந்தது.

தைராய்டு ஹார்மோன் அதிகம் இருக்கும் பாதிப்பு உடையவர்கள் தவிர்க்க வேண்டியது.

* காபி, டீ போன்றவை
* அடர்ந்த பால்
* அதிக சர்க்கரை
* சிவப்பு அசைவம்
* அலர்ஜி தருபவை
* வனஸ்பதி போன்ற அடர்ந்த கொழுப்பு
* அயோடின் அதிகமானவை
* கடல் உணவு
* ஆல்கஹால் ஆகியவை ஆகும்.



தைராய்ட் ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை.


* சிறு தானியங்கள்
* முட்டைகோஸ்
* காலி பிளவர்
* ப்ரோகலி
* பசலை கீரை
* புகையிலை
* மது
* சோயா
* க்ளூடன் உணவு
* செயற்கை சர்க்கரை
* அதிக மாவு சத்து
* துரித உணவு ஆகியவை ஆகும்.

தைராய்டு ஹார்மோன் குறைவு

* அதிக ஜிஷிபி குறைந்த ஜி3, ஜி4
* சோர்வு, மனச்சோர்வு,
* கவனக்குறைவு
* கழுத்தை சுற்றிய வீக்கம்
* தசை பிடிப்பு, தசை பலவீனம்
* எடைகூடும்
* வறண்ட சுரசுரப்பான அரிக்கும் சர்மம்
* வறண்ட முடி
* குளிர் தாங்காது
* முறையற்ற மாதவிடாய் சுற்று, அதிக ரத்தப்போக்கு
* கருத்தரிப்பின்மை (அ) கருச்சிதைவு
* மலச்சிக்கல்

* குறைந்த ஜிஷிபி, அதிக ஜி3, ஜி4
* படபடப்பு, எரிச்சல்
* அமைதியின்மை
* அதிக வியர்வை
* தூக்கமின்மை
* கழுத்தை சுற்றிய வித்தியாசம்
* சதை வலுவின்மை, சோர்வு, தொடையில் நடுக்கம், வெளிவந்த கண்கள்
* எடை குறையும்
* மெலிந்த தோல்
* மெலிந்து உடையும் முடி
* உஷ்ணம் தாங்காது
* முறையற்ற மாதவிடாய், குறைவான ரத்தப்போக்கு
* அடிக்கடி வயிற்றுப்போக்கு
Tags:    

Similar News