உடற்பயிற்சி

அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்...? அப்போ இத முதலில் படிங்க....!

Published On 2024-03-20 08:48 GMT   |   Update On 2024-03-20 08:48 GMT
  • ஐஸ்வாட்டரை குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்.
  • அறை வெப்பநிலையில் தண்ணீரை விட குளிர்ந்த நீர் தாகத்தைத் தணிக்கிறது.

ஆரோக்கியமான நல்வாழ்வு மற்றும் நீரேற்றத்தை நிலைநிறுத்துவதற்கு குடிநீர் ஒரு இன்றியமையாத அம்சமாகும். இருந்தாலும், நாம் குளிர்ந்த தண்ணீரை உட்கொள்வதால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்பது ஒரு பரவலான விவாதம் சுழல்கிறது.

ஐஸ்வாட்டரை குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பார்க்கலாம். ஐஸ்வாட்டர் குடிப்பது புத்துணர்ச்சியூட்டும் மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும், குறிப்பாக வெயில் காலம் அல்லது கடுமையான உடல் உழைப்பின் போது, ஐஸ்வாட்டர் குடிப்பது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. அறை வெப்பநிலையில் தண்ணீரை விட குளிர்ந்த நீர் தாகத்தைத் தணிக்கிறது.

இருப்பினும், குளிர்ந்த தண்ணீரை உட்கொள்வதன் பாதுகாப்பைப் பற்றி சில கருத்துகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களை சுருக்கி, அதன் மூலம் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்க வாய்ப்புள்ளது.

ஆயினும்கூட, ஐஸ்வாட்டர் குறைவாக அருந்துவது பொதுவாக பெரும்பான்மையான நபர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

ஐஸ்வாட்டர் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதை தடுக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிக்க ஆரம்பித்து விடும். அதுமட்டுமில்லாமல் சாப்பிட உடனேவும் தண்ணீர் அருந்துவதும் கூடாது.

ஃபிரிட்ஜில் இருக்கும் தண்ணீரை அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே கோடை காலத்தில் கூட ஐஸ் வாட்டர் அருந்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. அதிகமாக ஐஸ்வாட்டர் அருந்தும் போது உடலில் உள்ள செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

இதனால் உணவு செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. மேலும் ரத்த நாளங்களில் சுருக்கத்தையும் ஏற்படுகிறது.

குளிர்ச்சியான தண்ணீரை அடிக்கடி பருகுவதால் தொண்டை புண், மூக்கடைப்பு மற்றும் தொண்டையில் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சுவாசக்குழாயில் அதிகப்படியான சளி உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. இதனால் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.

குளிந்த நீரை அருந்தும் போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இது இதயத்துடிப்பை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வாட்டர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஐஸ்வாட்டரை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.

ஐஸ்வாட்டர் குடித்தவுடன் அது மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் தலைவலி ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ்வாட்டர் முதுகெலும்பில் உள்ள நரம்புகளையும் பாதிக்கிறது.

Tags:    

Similar News