உடற்பயிற்சி
தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் வராமல் வாழ்வதற்குரிய முத்திரைகள்

தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் வராமல் வாழ்வதற்குரிய முத்திரைகள்

Published On 2022-06-02 02:29 GMT   |   Update On 2022-06-02 02:29 GMT
உடலில் கழிவுகள் தேக்கத்தினால் தலைசுற்றல் ஏற்படும். இப்பொழுது தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் வராமல் வாழ்வதற்குரிய முத்திரைகளைக் காண்போம்.
பிரிதிவி முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனி க்கவும். பின் மோதிரவிரல், பெருவிரல் நுனியை இணை க்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
இதனால் மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். தலைசுற்றல், மயக்கம் வருவது தடுக்கப்படுகின்றது. மண்ணீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

சூன்ய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். பெண்கள் மாத விடாய் காலத்தில் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். இதயம், இதய வால்வுகள் நல்ல சக்தி ஓட்டம் பெற்று இயங்கும். இதயத்துடிப்பு சீராகும். அதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். தலை சுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் வராமல் வாழலாம்.

பிராண முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் சுண்டு விரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரல் நுனியை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

சிறுநீரகம் நன்றாக இயங்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். பய உணர்வு இருக்காது. சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் பிராண சக்தி எல்லா இடங்களிலும் நன்றாக பரவும். அதனால் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை செய்கின்றது.

முகுள முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

ஆதி முத்திரை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.

மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக தினமும் மூன்று வேளை பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ராஜ உறுப்புக்கள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். அதனால் உடல், மன சோர்வு நீங்கி, மயக்கம், தலைசுற்றல் வராமல் வளமாக வாழலாம்.

உணவு

பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசி பழம், அத்தி பழம், மாதுளம்பழம், கருப்பு திராட்சை இதை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
புதினா கீரை, கொத்தமல்லி, அரைக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, அரைக்கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இளநீர், தேங்காய், வாழைப்பழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

கருப்பு உளுந்து கஞ்சி, உளுந்து தோசை, கருப்பு உளுந்து களி, வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.முளைகட்டிய பயிறு அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் குறைத்து பழச்சாறு, பழம் சாலட், வெஜிடபுள் சாலட் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

வாரம் ஒரு முறை அருகம்புல், துளசி, வில்வம் ஒரு கைப்பிடி எடுத்து கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றியவுடன் வடிகட்டி அரை டம்ளர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை குடிக்கவும்.

வேப்ப இலை கொழுந்து மாதம் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு பறித்து தண்ணீரில் கழுவி காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடவும்.
Tags:    

Similar News