உடற்பயிற்சி
பத்மாசனம்

மூளையை சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும் பத்மாசனம்

Published On 2022-05-31 09:22 IST   |   Update On 2022-05-31 09:22:00 IST
ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
செய்முறை

தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.

இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும். முதுகை நிமிர்த்தி மலர்ந்த கால்களின்மேல் இரு கைகளும் சின்முத்திரை நிலையில் இருக்க வேண்டும்.

நேர் முகமாக நோக்குதல் வேண்டும், இடை, வயிறு, கண்டம், தலை ஆகியவைகள் சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்த்திருக்க வேண்டும். இதுவே பத்மாசனம் ஆகும்.

பத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும்.

சுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.

யோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும்.

ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

பலன்கள்

வலது கால், இடது தொடையிலும், இடது கால் வலது தொடையிலும் அமுக்கப்படுவதால் வலது பக்க மூளை, இடது பக்க மூளைக்கு நல்ல இரத்த ஓட்டம் செல்லும், மூளை நரம்புகள் சிறப்பாக இயங்கும். மூளை செல்கள் நன்கு பிராண சக்தி பெற்று இயங்கும். வலது மூளை, இடது மூளை மிகச் சிறப்பாக இயங்கும். எதிர்மறை எண்ணங்கள் வராது. நேர்முகமான எண்ணங்கள் அதிகரிக்கும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் பயன்படுகிறது.

சுவாச சம்பந்தமான நோய்கள் வராது. முதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும். வாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.

Tags:    

Similar News