உடற்பயிற்சி
பிரிதிவி முத்திரை, ஹாக்கினி முத்திரை

மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்கச் செய்யும் முத்திரைகள்

Published On 2022-05-27 02:43 GMT   |   Update On 2022-05-27 02:43 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள முத்திரைகள் அனைத்தும் மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்கச் செய்யும். மூளை செல்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
எளிமையான மூச்சுப்பயிற்சி

நிமிர்ந்து அமருங்கள். இரு நாசிவழியாக மிக மிக மெதுவாக மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இப்படி செய்யும் பொழுது மூளைக்கு நன்கு பிராண சக்தி கிடைக்கின்றது. மூளை நரம்பு மண்டலங்கள் பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்குகின்றது. இதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

பிரிதிவி முத்திரை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மாலை இரு வேளையும் செய்யவும்.

ஹாக்கினி முத்திரை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் எல்லா கை விரல் நுனிகளையும் சேர்த்து படத்தில் உள்ளதுபோல் ஒரு பந்து வடிவில் வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும். காலை / மாலை இரு வேளையும் பயிற்சி செய்யலாம்.

பலன்கள்

மேற்குறிப்பிட்ட முத்திரைகள் அனைத்தும் மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்கச் செய்யும். மூளை செல்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
Tags:    

Similar News