உடற்பயிற்சி
தியானம்

அன்றாட வாழ்க்கைக்கான தியானம்

Published On 2022-05-26 02:52 GMT   |   Update On 2022-05-26 02:52 GMT
நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம்.
நாம் சில நேரங்களில் உண்மையில் கோபமோ அல்லது விரக்தியோ அடைந்த நிமிடங்கள் இருக்கும், ஆனால் நமக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் : “அதிக அன்பானவராக இருங்கள்” ஏனெனில் இந்த மனநிலையோடு தேவையான தியான பயிற்சியும் சேர்ந்தால் நாம் பழக்கப்படுவோம், நம்மால் உடனுக்குடன் அதனை உருவாக்க முடியும்.

யாருமே நிறைவானவர் அல்ல, நாம் அனைவருமே ஏதோ ஒரு தீய பழக்கத்தை கண்டறிந்து அதில் இருந்து வெளியேற நினைக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்த பழக்கங்கள் மாற்ற முடியாத கற்களில் செதுக்கியதாக இல்லாமல், மாற்றிக்கொள்ளும் வகையில் உள்ளன.

இந்த மாற்றம் தேவை தான் ஆனால் அதற்கு நம்முடைய சொந்த முயற்சியும் முக்கியம். நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம். தொடக்கத்தில் இது கடினம் தான், ஆனால் ஒரு முறை தியானம் நம் வாழ்வில் கொண்டு வந்திருக்கும் பலன்களைப் பார்த்துவிட்டால், நமது மனதிற்காக நேரத்தை முதலீடு செய்து செயலாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைவோம்.

மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.
Tags:    

Similar News